அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் சரியாக பணியாற்றுகிறார்களா என ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நோயாளிகளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் அனைத்தும் போதுமானதாக இருப்பு உள்ளதா எனவும், தமிழக அரசின் இன்னூயிர் காப்போம் திட்டம் அரசு சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும், நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது டாக்டர்கள், சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story