பருவமழை தொடங்கி உள்ளதால் விதை பரிசோதனை செய்து விதைப்பு செய்தால் அதிக மகசூல் பெறலாம்; வேளாண் அதிகாரிகள் தகவல்


பருவமழை தொடங்கி உள்ளதால்  விதை பரிசோதனை செய்து விதைப்பு செய்தால் அதிக மகசூல் பெறலாம்;  வேளாண் அதிகாரிகள் தகவல்
x

பருவமழை தொடங்கி உள்ளதால் விதை பரிசோதனை செய்து விதைப்பு செய்தால் அதிக மகசூல் பெறலாம் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஈரோடு

பருவமழை தொடங்கி உள்ளதால் விதை பரிசோதனை செய்து விதைப்பு செய்தால் அதிக மகசூல் பெறலாம் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

விதை பரிசோதனை

இதுகுறித்து ஈரோடு விதை பரிசோதனை நிலைய வேளாண் அதிகாரிகள் சாந்தி, கோகிலீஸ்வரி ஆகியோர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் தற்போது பருவ மழை தொடங்கி உள்ளது. நிலங்களை தயார் செய்து உழவு பணி செய்வோர், தரமான விதையை பயன்படுத்த வேண்டும். அதிக முளைப்பு திறன், அளவான ஈரப்பதம், இனத்தூய்மை, அதிக புறத்தூய்மை கொண்ட விதை, பூச்சி, நோய் தாக்குதல் இல்லாத விதையை பயன்படுத்த வேண்டும்.

நன்றாக உலர்ந்து சேமிக்கப்பட்ட விதைகளை விதைக்க வேண்டும். ஈர விதைகளை விதைக்கக்கூடாது. எனவே விதையின் முளைப்பு திறன், தூய்மை, ஈரத்தன்மை, பிற ரக விதை கலப்பை கண்டறிய, விதை பரிசோதனை அவசியமாகும்.

அங்ககச்சான்று

விதை பரிசோதனைக்கு பகுப்பாய்வு விதை மாதிரியாக நெல் 400 கிராம், பயறு வகைகள், சோளம் 150 கிராம், மக்காசோளம், நிலக்கடலை 500 கிராம், எள் 25 கிராம், கீரை 50 கிராம், வெங்காயம், தக்காளி, கத்தரி, மிளகாய் 10 கிராம், பூசணி, பந்தல் காய்கறிகள், வெண்டை 150 கிராம் எடுத்து வர வேண்டும்.

விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் 'SPECS'-ல் பதிவு செய்து, பதிவேற்ற நகலில் உற்பத்தியாளர் கையெழுத்திட்டு, விதைகளின் சரியான அளவு மாதிரியுடன் ஆய்வுக்கு வர வேண்டும்.

ரூ.80 கட்டணம்

மேலும் 'வேளாண் அலுவலர், விதை பரிசோதனை நிலையம், வேளாண் துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலைய வளாகம், வித்யா நகர், திண்டல், ஈரோடு638012' என்ற முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலமும் விதைகளை அனுப்பலாம். ஒரு மாதிரி பரிசோதனைக்கு ரூ.80 கட்டணம் ஆகும். விதை பரிசோதனை செய்து தரமான விதையை விதைப்பதால், கூடுதல் மகசூல் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் வேளாண் அதிகாரிகள் சாந்தி, கோகிலீஸ்வரி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.


Related Tags :
Next Story