பள்ளி மாணவர்களுக்கு கலை இலக்கிய போட்டிகள்
பள்ளி மாணவர்களுக்கு கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6-வது புத்தக திருவிழா வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 6-ந் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஒன்றிய அளவிலான கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது. இதில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். 6 முதல் 8-ம் வகுப்புகள் வரை ஒரு பிரிவாகவும், 9, 10-ம் வகுப்புகளுக்கு ஒரு பிரிவாகவும், 11, 12-ம் வகுப்புகளுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. கவிதை, பேச்சு, ஓவியம் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் முதல் இடத்தை பிடித்தவர்கள் வருகிற 17-ந் தேதி அன்று மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்பர். இவர்களுக்கு புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தக திருவிழா மேடையில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.