பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலை போட்டிகள் இன்று நடக்கிறது
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலை போட்டிகள் இன்று நடக்கிறது.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் குரலிசை, பரத நாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே, சிலம்பம் போன்ற கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்ட அளவில் 5 முதல் 8 வயது வரையும், 9 முதல் 12 வயது வரையும், 13 முதல் 16 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், பரதநாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை), குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் போட்டிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தங்களது வயது சான்றிதழ் மற்றும் பள்ளி படிப்பு சான்றிதழ்களுடன் வர வேண்டும். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என்று கலெக்டா் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.