பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டவர் கைது


பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டவர் கைது
x

அவளூர் அருகே பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம் அருகே அவளூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஜாகீர்தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 42). இவர் கடந்த 2019-ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பாபு இருந்துள்ளார். இதையடுத்து பாபுவை கைது செய்ய நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார்.

இதனையடுத்து அவளூர் போலீசார் நேற்று பாபுவை கைது செய்து, ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Next Story