ராயக்கோட்டை அருகே350 கிலோ இரும்பு கம்பி திருட முயன்றவர் கைது


ராயக்கோட்டை அருகே350 கிலோ இரும்பு கம்பி திருட முயன்றவர் கைது
x
தினத்தந்தி 13 April 2023 12:30 AM IST (Updated: 13 April 2023 2:56 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

தர்மபுரி ராயல் நகரை சேர்ந்தவர் கிரி (வயது 48). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த கட்டுமான நிறுவனம் சார்பில் ராயக்கோட்டை அருகே உள்ள டி.கொல்லப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இதற்காக அந்த பகுதியில் தளவாட பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு கிரி சென்றபோது வாலிபர் ஒருவர் அங்கிருந்த இரும்பு கம்பிகளை சரக்கு வாகனத்தில் ஏற்றி திருட முயன்றது தெரியவந்தது.

அவரை கையும், களவுமாக பிடித்து ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சூர்யா (25), ராயக்கோட்டை அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் என்றும், 10 ஆயிரம் மதிப்புள்ள 350 கிலோ இரும்பு கம்பிகளை சரக்கு வாகனத்தில் திருடி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து சூர்யாவை கைது செய்த போலீசார் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story