பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x

பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர்

இந்திய அரசின் சார்பில் 2022-ம் ஆண்டு கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல், வணிகம், தொழிற்சாலை ஆகிய பிரிவுகளில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விருது மலைவாழ் மக்கள், சமூகத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலன், பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் சாதனை புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மருத்துவர்கள் அல்லாத அரசு ஊழியர்கள், விஞ்ஞானிகள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வேலூர் மாவட்ட விளையாட்டு இளைஞர் நல அலவலரிடம் செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story