ஐ.டி.பி.ஐ. வங்கியில் 600 உதவி மேலாளர் பணியிடங்கள்
ஐ.டி.பி.ஐ. வங்கியில் 600 உதவி மேலாளர் பணியிடங்களுக்கு 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பொதுத்துறை வங்கியான ஐ.டி.பி.ஐ. வங்கியில் உதவி மேலாளர் பணியிடம் காலியாக உள்ளது. மொத்தமுள்ள 600 பணியிடங்களில் பொதுப்பிரிவினருக்கு 244 பணியிடங்களும், ஆதி திராவிடர்பிரிவினருக்கு 190 பணியிடங்களும், பழங்குடியினருக்கு 17 பணியிடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 89 பணியிடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 60 பணியிடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினருக்கு 5 வருடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் தனியார் அல்லது பொதுத்துறை வங்கியில் 2 வருடம் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முக தேர்வு மற்றும் குழு விவாதம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வுகள் பற்றிய விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
ஆன்லைன் எழுத்து தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும். பொதுப்பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்களுக்கு ரூ.1000 விண்ணப்ப கட்டணமும், ஆதி திராவிடர் பழங்குடியினருக்கு ரூ.200 விண்ணப்ப கட்டணமும் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். www.idbibank.in என்ற இணையதளம் மூலமாக வருகிற 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும். தேர்வு நடைபெறும் மையங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் இணையதளத்தில் உள்ளது. இந்த தகவலை வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.