சமுதாய நல்லிணக்க செயலுக்காக வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


சமுதாய நல்லிணக்க செயலுக்காக வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
x

சமுதாய நல்லிணக்க செயலுக்காக வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

கபீர் புரஸ்கார் விருது

தமிழக அரசின் 2022-ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2022-ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்-அமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதானது தலா ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் என தகுதியுடையோர்க்கு வழங்கப்படுகிறது. (சென்னை மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள், ஆயுதப்படை வீரர்கள், காவல் தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர்.

12-ந் தேதிக்குள் விண்ணப்பம்

மேலும் இவ்விருதானது ஒரு சாதி, இனம் வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிவிக்கையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரியான htpp://awards.tn.gov.in மற்றும் www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை பெற்று தலைமையகம் அனுப்பிட வேண்டியுள்ளதால், விண்ணப்பங்களை வருகிற 12-ந் தேதிக்குள் காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் சமர்பித்திட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story