தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் தேவை - கி.வீரமணி அறிக்கை


தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் தேவை - கி.வீரமணி அறிக்கை
x

தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் தேவை என கி.வீரமணி அறிக்கையில் கூறியுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'தினத்தந்தி'யில், ஆவிகளிடம் பேச வைப்பதாக ஆசைக்காட்டி என்ஜினீயரிடம் ரூ.2 கோடி மோசடி செய்த கேரள மந்திரவாதி அதிரடியாக கைது செய்யப்பட்டார் என்று செய்தி வெளிவந்துள்ளது.

இது போன்ற மூடநம்பிக்கைகளுக்கு பலியாகி மக்கள் பாதிக்கப்படும் நிகழ்ச்சிகள் இப்போதெல்லாம் தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களிலும் பரவி வருகின்றன.

மாந்திரீகம் என்ற பெயரில் பெண்களிடம் நகை பறித்தல், பில்லி, சூனியம் எடுக்கும் பெயரால் பண மோசடி, நகைக்கொள்ளைகள், பெண்களிடம் வன்கொடுமை, பாலியல் சீண்டல்கள், சில இடங்களில் நரபலி, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் இவை போன்று நடந்தது கண்டறியப்பட்டுள்ளது வேதனை தருவதாகும்.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் 51 ஏ (எச்) பிரிவு 'இந்திய குடிமக்களிடையே அறிவியல் மனப்பாங்கை வளர்த்து கேள்வி கேட்கும் திறனை வளர்ப்பது, சீர்திருத்தம், மனிதநேயம் பரப்புதல் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமை' என்று வற்புறுத்துகிறது.

மராட்டியத்தில் மூடத்தனத்துக்கு எதிராக தனி சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் தேவை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story