போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்


போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 10:29 AM IST)
t-max-icont-min-icon

செம்போடை ஆர்.வி.கல்வி நிறுவனங்கள் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

நாகப்பட்டினம்


செம்போடை ஆர்.வி. கல்வி நிறுவனங்கள் சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆர்.வி. கல்வி நிறுவன தாளாளர் வரதராஜன், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திர போஸ் தொடங்கி வைத்தார். ஊர்வலமானது செம்போடை தெற்கு கடைத்தெரு, வடக்கு கடைத்தெரு வழியாக ஈரவாய்க்கால் சாலை வரை சென்றது. இதில் மது, போதை பழக்கத்திற்கு அடிமையானால் சிந்திக்கும் திறன் குறையும். மனச்சோர்வு, ஞாபகம் மறதி, தற்கொலை எண்ணம் உண்டாகும். போதைப்பழக்கம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை மாணவ- மாணவிகள் கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். நிகழ்ச்சியில் ஆர்.வி. பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நடராஜன், கலை அறிவியல் கல்லூரி முதல்வர்கள் கல்யாண சுந்தரம், முகமது பைசல், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் உள்பட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story