போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மோகனூர்
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட கலால் அலுவலர் கண்ணன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருண், புகையிலை தடுப்பு பிரிப்பு அலுவலர் ராஜ்கமல், சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி, மாவட்ட உளவியல் ஆலோசகர் அர்ச்சனா ஆகியோர் கலந்துகொண்டு போதை பொருட்களின் தீமைகள் குறித்து விளக்கி பேசினர். மேலும் வாழ்க்கையில் உயர்ந்த எண்ணங்களுடன் சுறுசுறுப்பாக செயல்படும்போது இப்பழக்க வழக்கங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் துண்டு பிரசுரங்கள் மூலமும் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை தலைவர் ராஜ்குமார், தமிழ் துறை உதவி பேராசிரியர் அன்பரசன், கல்லூரி திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.