போதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
பாளையங்கோட்டையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.
திருநெல்வேலி
பாளையங்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்டம் தொடங்கப்பட்ட 50-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 'போதையில்லா பாதை' என்ற தலைப்பில் இறைவன், இயற்கை இனிய நலம் தேடி என்ற பெயரில் போைத ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. பாளையங்கோட்டை சவேரியார் பேராலயத்தில் இருந்து தொடங்கிய சைக்கிள் பயணம் சீவலப்பேரி வழியாக தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலம் வரை சென்றடைந்தது. இந்த பேரணிக்கு பங்கு தந்தை சந்தியாகு தலைமை தாங்கினார். டாக்டர் அந்தோணி ராஜ் பேரணியை தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 500-க்கும் மேற்பட்டோர் போதை ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் பதாகைகளை சைக்கிளில் பொருத்தியபடி கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story