மாவட்ட வனத்துறை அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


மாவட்ட வனத்துறை அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x

புதுக்கோட்டையில் மாவட்ட வனத்துறை அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் மாவட்ட வனத்துறை அதிகாரி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தில் வனத்துறை அதிகாரிகள் இருந்தனர். முறைகேடாக பணம் பரிவர்த்தனை ஏதும் நடைபெறுகிறதா? எனவும் கணக்கில் வராத பணம் ஏதும் உள்ளதா? எனவும் சோதனையிட்டனர். இந்த சோதனை நேற்று இரவு 10 மணியளவில் நிறைவடைந்தது. மேலும் சோதனையில் எதுவும் சிக்கவில்லை என லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story