பேரறிஞர் அண்ணா நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை


பேரறிஞர் அண்ணா நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
x

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று(பிப்.3) அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஸ்பெயினில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணாவின் நினைவுதினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், அண்ணாவின் நினைவுதினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக - அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவுநாள்.

இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும். எண்ணித் துணிக கருமம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story