அண்ணா நினைவு தினம்; அமைச்சர் மூர்த்தி, ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு
சங்கரன்கோவிலில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, ராஜா எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தின நிகழ்ச்சி சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கவேலு, யூ.எஸ்.டி.சீனிவாசன், பரமகுரு, மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டு அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, ஒன்றிய செயலாளர்கள் பொன் முத்தையா பாண்டியன், பூசை பாண்டியன், சேர்மத்துரை, வெற்றி விஜயன், பெரியதுரை, ராமச்சந்திரன், மதிமாரிமுத்து, நகராட்சி தலைவர்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா, பேரூர் கழகச் செயலாளர்கள் சிவகிரி டாக்டர் செண்பக விநாயகம், ராயகிரி குருசாமி, வாசுதேவநல்லூர் ரூபி பாலசுப்பிரமணியன், திருவேங்கடம் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.