கண்களில் கருப்பு துணி கட்டி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கண்களில் கருப்பு துணி கட்டி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நேற்று சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி சிதம்பர நகர் பஸ்நிறுத்தம் அருகே நேற்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகவீரபாண்டிய கட்டப்பொம்மன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் சாதகன், அந்தோணியம்மாள், மாரியம்மாள், முருகேசன், அழகுக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் ஜெயலட்சுமி வரவேற்றார். மாவட்ட நிதிக்காப்பாளர் பாக்கியசீலி தொடக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர் உத்தண்ட ராமன் மற்றும் மாநில துணைத்தலைவர் கனகவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

காலமுறை ஊதியம்

வருவாய் கிராம ஊழியருக்கு இணையாக மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 750 அகவிலைப்படியுடன் சேர்த்து வழங்க வேண்டும். அரசுத்துறை காலிப்பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைத்து, சத்துணவு ஊழியர்களைக் கொண்டே செயல்படுத்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் எபனேசர் டேனியல் தனராஜ், மரிய அந்தோணி ரூஸ்வெல்ட், பலவேசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story