கடலூரில் புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது
கடலூரில் புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டாா்.
கடலூர்
கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் மஞ்சக்குப்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் முதியவர் ஒருவர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார், அந்த முதியவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த சம்பத் (வயது 68) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத்தை கைது செய்தனர். மேலும் அவரது பெட்டிக்கடையில் இருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story