வீட்டில் 1,200 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது
வீட்டில் 1,200 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
வீட்டில் 1,200 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
ரேஷன் அரிசி பதுக்கல்
தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் டி.ஜி.பி. அருண் அறிவுரையின் பேரிலும், திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின் பேரிலும், துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் கொண்ட குழுவினர் திருச்சி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வந்தனர்.
அப்போது திருச்சியை அடுத்த இனாம்குளத்தூரில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியபோது, தியாகராஜன் (வயது 68) என்பவர் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அங்கு இருந்த தலா 50 கிலோ எடைகொண்ட 24 மூட்டைகளில் இருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல்
மேலும் விசாரணையில் அவர், ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, மாட்டு தீவனத்துக்கும், இரவு நேர டிபன் கடைகளுக்கு மாவு அரைக்கவும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தியாகராஜனை கைது செய்த போலீசார், அங்கிருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியையும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் வாங்க பயன்படுத்திய ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.