விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு


விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
x

நெல்லை வண்ணார்பேட்டையில் நடந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் பாறையடி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 55). இவர் வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும், அதே நிறுவனத்தில் வேலைபார்க்கும் மேலப்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்த ரகு (40) என்பவரும் நேற்று இரவு வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் மொபட்டில் சென்றனர். மொபட்டை ரகு ஓட்டிச்சென்றார்.

அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே சென்றபோது அந்த வழியாக, பரத் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். ரகு, பரத் ஆகியோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story