அம்பேத்கர் பிறந்தநாள் விழா


அம்பேத்கர் பிறந்தநாள் விழா
x

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நாமக்கல்

அம்பேத்கர் பிறந்தநாள் விழா

இந்தியா முழுவதும் நேற்று அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல்லில் மணிக்கூண்டு அருகே கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் முத்துக்குமார், ரவி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் ஜெயந்தி, நகர பொதுச்செயலாளர் தினேஷ், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் நிஷாந்த், வக்கீல் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மலர் தூவி மரியாதை

அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், தமிழக சட்டசபையில் சர்வாதிகாரம் நடப்பதாகவும், சபாநாயகர் அப்பாவு, முதல்-அமைச்சர் மற்றும் அவரது வீட்டில் உள்ளவர்கள் கூறுவதை கேட்டு நடக்கிறார் எனவும் கூறினார். மேலும் அம்பேத்கர் தந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக பின்பற்றி ஆட்சி நடத்துபவர் பிரதமர் மோடி மட்டும் தான் என ராமலிங்கம் தெரிவித்தார்.

பின்னர் நாமக்கல் மணிக்கூண்டு அருகே தமிழ்நாடு அரசு எஸ்.சி மற்றும் எஸ்.டி. அலுவலர் நலச்சங்கம் சார்பில் நந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவுக்கு, சங்கத்தின் மாநில இணை செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயரத்தினகாந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் வரவேற்றுப் பேசினார்.

இதையடுத்து அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதோடு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. முடிவில் பொருளாளர் மஞ்சுநாதன் நன்றி கூறினார்.

பின்னர் சங்கத்தின் சார்பில் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி துத்திகுளத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு தலா ரூ.1,000 வீதம் நிதி உதவி வழங்கப்பட்டது.

அரசியல் கட்சிகள்

இதேபோல் தளபதி விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சதீஸ் தலைமையில் செயலாளர் பாலா, பொருளாளர் சக்திசதீஸ், வக்கீல் அணி செயலாளர் லோகேஸ் மற்றும் நிர்வாகிகள் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கப்பட்டது.

மேலும் பா.ம.க. மத்திய மாவட்ட தலைவர் தினேஷ் பாண்டியன் தலைமையில் நகர செயலாளர் சூர்யா, நகர தலைவர் காமராஜ் மாவட்ட துணை செயலாளர் சரவணன், துணை தலைவர் மணி ஊடக பிரிவு பாபு ஆகியோர் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ராசிபுரம்

சட்ட மேதை அம்பேத்கர் 132-வது பிறந்தநாளையொட்டி ராசிபுரம் சிவானந்தா சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு நகர கம்யூனிஸ்டு செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக கழகத்தின் நகர செயலாளர் பிடல் சேகுவாரா, முன்னாள் நகர வங்கி இயக்குனர் சுந்தரம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் மீனா, திராவிடர் விடுதலை கழக நகர அமைப்பாளர் சுமதி மதிவதனி, ராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்ட் துணைச் செயலாளர்கள் சாதிக் பாட்ஷா, கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சலீம், நகர குழு உறுப்பினர்கள் ராஜா, பயாஸ், வெண்ணந்தூர் ஒன்றிய குழு உறுப்பினர் மாதேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதித் தமிழர் பேரவை

தேசிய திராவிட கட்சியின் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் எழில், கோபி, திருக்கணியன், திருநாவுக்கரசு, சங்கர், முருகேசன், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் ராசிபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஆதித்தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார் மாலை அணிவித்து பேரவையின் நீல செங்கொடியை ஏற்றி முழக்கமிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அருள் வரவேற்றார். மாவட்ட தலைவர் சுமன், நிதி செயலாளர் நீல வேங்கை, மகளிர் அணி செயலாளர் நதியா, தூய்மை தொழிலாளர் மாவட்ட செயலாளர் வீரமணி, மாவட்ட துணை அமைப்பு செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தொண்டர் அணி செயலாளர் தமிழரசு, இளைஞர் அணி செயலாளர் சந்திரன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன், நாமக்கல் ஒன்றிய செயலாளர் பெருமாள், தூய்மை தொழிலாளர் அணி ரவி, ஆனந்த், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் அருகில் பேரவையின் கொடி ஏற்றி வைத்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

அம்பேத்கரின் பிறந்த நாள் விழா சமூக நீதி நாளாக ராசிபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. ராசிபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி, ராசிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராசு, மாதர் சங்க மாவட்ட தலைவர் ராணி, கிளைச் செயலாளர் சண்முகம் மற்றும் கண்ணன், துரை, காளியப்பன், விஜயேந்திரன், பாலு, முஸ்தபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story