அம்பேத்கர் பிறந்த நாள் விழா


தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் 3 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் 3 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி மயிலாடுதுறை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் புதுச்சேரி பாவாணன் தலைமையில் ஊர்வலமாக சென்நு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் காங்கிரஸ் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு ராஜ்குமார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தி.மு.க.-அ.தி.மு.க.

செம்பனார்கோவில் அருகே மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் அம்பேத்கர் சிலைக்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலபெரும்பள்ளம் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவுக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட அவை தலைவர் பாரதி தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் காமராஜ் தலைமையிலும்,ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.பூம்புகார் அருகே தர்ம குளம் கடைத்தெருவில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப்படத்திற்கு கீழையூர் கிராமத் தலைவர் கலியபெருமாள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், பூம்புகார் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் நற்பணி மன்ற தலைவர் சரவணன் வரவேற்றார்.

இதில் சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் தி.மு.க. பிரமுகர் சக்கரவர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைப்பாளர் சுபாஷ் உள்பட பலர் கொண்டனர். முடிவில் கிராம பொருளாளர் லோகநாதன் நன்றி கூறினார்

குத்தாலம்

குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சி செங்குடி கிராமத்தில் நடந்த விழாவுக்கு குத்தாலம் ஒன்றிய பொறுப்பாளர் டி.பி.சாமி சுபாஷ் தலைமை தாங்கினார். அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் செல்லப்பா, துணைத்தலைவர் மதன்மோகன், முகாம் செயலாளர் பிரசன்னா, முகாம் துணை செயலாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிர்வாகி அபி வரவேற்றார்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பூம்புகார் சட்டமன்ற தொகுதி செயலாளர் பூவைஅன்பரசன் கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.முன்னதாக அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.


Next Story