அமராவதி ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அமராவதி அணையில் தண்ணீர் திறக்கும் முன் ஆற்றில் மண்டியுள்ள முட்புதர்களை அகற்றி தூர்வார வேண்டுமென பொதுப்பணித்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அமராவதி அணையில் தண்ணீர் திறக்கும் முன் ஆற்றில் மண்டியுள்ள முட்புதர்களை அகற்றி தூர்வார வேண்டுமென பொதுப்பணித்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இ்துகுறித்து அவர்கள் கூறியதாவது:-
அமராவதி ஆறு
கரூர் மற்றும் திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களை வளப்படுத்தும் காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்று அமராவதி ஆறு. இவை பழனி மலைத்தொடருக்கும் ஆனைமலைத்தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகிறது. இதனுடன் பாம்பாறு, சின்னாறு மற்றும் தேனாறு ஆகியவை இணைந்து கொள்கின்றன.
அமராவதி அணை மூலம் தடுக்கப்பட்டு அமராவதி நீர்த்தேக்கம் மூலம் தண்ணீர் தேக்கப்பட்ட பிறகு அமராவதி அணையில் தண்ணீர் திறக்கும் போது கொமரலிங்கம், தாராபுரம், சின்னதாராபுரம் பகுதி வழியாக பாய்ந்து கரூர் அருகே காவிரியுடன் கலக்கிறது.
1½ லட்சம் ஏக்கர் நிலம் பாசனம்
அமராவதி அணைஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் செப்டம்பர், அக்டோபர் வரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் தென் மேற்கு பருவமழையால் நிரம்புகிறது.
இதிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், சின்னதாராபுரம், கரூர் வரை சுமார் 182 கிலோ மீட்டர் தூரம் சென்று அமராவதி ஆற்றில் கலக்கிறது. அமராவதி ஆற்றில் வரும் தண்ணீரை கொண்டு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1½ லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது.
முட்செடிகள் ஆக்கிரமிப்பு
இதன் மூலம் விவசாயிகள் மஞ்சள், கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிரிடப்பட்டு அறுவடை செய்வதன் மூலம் விவசாயம் செழித்து விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைவது மட்டுமல்லாது, உணவு பஞ்சம் இல்லாமல் இருந்து வருவதற்கு அமராவதி அணை பெரும் உதவி செய்து வருகிறது.
இந்த அணையின் மூலம் திறக்கப்படும் தண்ணீர் விவசாயத்திற்கு அனைத்து பகுதிகளும் கடைமடை பகுதி வரை சென்றால் மட்டுமே விவசாயம் செய்து பிழைக்க முடியும் என்ற நிலை உள்ளது. தற்போது இந்த நிலை மாறி முட்புதர்கள் அமராவதி ஆற்றின் கரையின் இருபுறமும் முட் செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது.
சுகாதாரமான விவசாயத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டியது பொதுப்பணித்துறையின் கடமையாக உள்ளது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் முன் ஆற்றில் உள்ள முட்கள் மற்றும் செடிகள் வெட்டி அகற்றி தூர்வார வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.