நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் மாணவிக்கு மாற்றுச்சான்றிதழ்


நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் மாணவிக்கு மாற்றுச்சான்றிதழ்
x

நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் மாணவிக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருச்சி

மக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு முந்தைய ஏற்பாடாக, நிரந்தர மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பு மாவட்டந்தோறும் செயல்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் பலர் தங்களது சட்ட பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு கண்டு வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சியில் உள்ள பாலிடெக்னிக் மாணவி ஜெனிபர்மேரி தனது குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தினார். அந்த மாணவிக்கான மாற்றுச்சான்றிதழ் கேட்டு கல்லூரியில் விண்ணப்பித்தார். ஆனால் கல்லூரி நிர்வாகம் மாணவி செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்திவிட்டு மாற்றுச்சான்றிதழை பெற்று கொள்ள கூறியுள்ளது. இதையடுத்து மாணவி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகினார்.அதன்அடிப்படையில் சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் தரப்பை அழைத்து பேசி மாணவிக்கு மாற்றுசான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருச்சி கோர்ட்டு வளாகத்தில் நேற்று நடந்த நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மாணவிக்கு மாற்றுச்சான்றிதழை மாவட்ட நீதிபதி ஜெய்சிங் வழங்கினார். அப்போது நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் வக்கீல் ரமேஷ், ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story