வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அனைத்து கட்சி கூட்டம்
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அனைத்து கட்சி கூட்டம் கடலூா் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்றது.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கினார். தேர்தல் துணை தாசில்தார்கள் வெற்றிச்செல்வன், செந்தமிழ்ச்செல்வி, ஷானாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அமர்நாத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், தே.மு.தி.க. நகர செயலாளர் சரவணன், பா.ஜ.க. நகர தலைவர் வேலு. வெங்கடேசன், பகுஜன் சமாஜ் கட்சி மாநில இளைஞரணி சுரேஷ், தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ள வாக்காளரின் பெயரை நீக்குவதற்காகவும், பட்டியலில் உள்ள விவரங்கள் மற்றும் பெயர்களில் உள்ள பிழைகளை நீக்குவதற்காகவும் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. இது பற்றி வாக்காளர்களிடம் அனைத்துக்கட்சி நிர்வாகிகள் எடுத்து சொல்ல வேண்டும். பிழைகள் இன்றி வாக்காளர் பட்டியல் தயாரிக்க உதவ வேண்டும். இந்த பணி இன்று தொடங்கி, 31.3.2023-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது பற்றி சிறப்பு முகாம் 4.9.2022 அன்று நடக்கிறது என்று கோட்டாட்சியர் எடுத்துரைத்தார்.