அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
களக்காட்டில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
களக்காடு:
நாங்குநேரியில் மாவட்ட மருத்துவமனை அமைக்க கோரி, அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுநல அமைப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் போராட்டக்குழு அமைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக களக்காட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கிருஷ்ணன் (இந்திய கம்யூனிஸ்டு) ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.), ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் ஜெயராமன், வேல்சாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் செல்வராஜ், பா.ஜனதா ஒன்றிய தலைவர் ராமேஸ்வரன், நகர தலைவர் கணபதி, சேர்மன்துரை, ம.தி.மு.க.வை சேர்ந்த பேச்சிமுத்து, துரை அழகன், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகர், மாரியப்பன், காங்கிரஸ் முத்துகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பூலுடையார், புரட்சி பாரதம் நெல்சன், நாம் தமிழர் கட்சி செல்வின் மற்றும் ச.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் நாங்குநேரியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.