திருநாவலூரில்விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள்மணிக்கண்ணன் எம்.எல்.ஏ வழங்கினார்
திருநாவலூரில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான ஏ.ஜே.மணிக்கண்ணன் தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான வேளாண் இடு பொருட்களை மானிய விலையில் வழங்கினார். இதில் திருநாவலூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி இளங்கோவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், நிர்வாகிகள் பழனி, கிளாப்பாளையம் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story