விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள்
களஞ்சேரி ஊராட்சியில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள்
தஞ்சாவூர்
அம்மாப்பேட்டை:
அம்மாப்பேட்டை ஒன்றியம், களஞ்சேரி ஊராட்சியில் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு சிறப்பு திட்ட வேளாண் இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவை ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு தலா 45 கிலோ யூரியா, 25 கிலோ பொட்டாஷ், 50 கிலோ டி.ஏ.பி. உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் ஸ்ரீவள்ளி விவேகானந்தன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மல்லிகா, கூட்டுறவு சங்க முன்னாள் துணைத் தலைவர் ராமமூர்த்தி, சங்க செயலாளர் விஜயகுமார், வேளாண் விரிவாக்க அலுவலர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் சூரியகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story