அடரியில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்


அடரியில்  விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள்  அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்
x

அடரியில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.

கடலூர்

சிறுபாக்கம்,

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் என்ற புதிய திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அந்த வகையில், சிறுபாக்கம் அடுத்த அடரியில் இத்திட்டத்தின் கீழ் வேளாண் இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமை தாங்கி, 600 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பற்றதில் இருந்து 200-க்கும் அதிகமான நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அந்த வகையில் இன்று(நேற்று) தொடங்கிய திட்டமும் சிறந்த ஒரு திட்டமாகும். இதன் மூலம் நாட்டில் சிறந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்றார் அவர்.

இதில் மங்களூர் ஒன்றிய குழு தலைவர் சுகுணா சங்கர், வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார், தாசில்தார் மோகன், வேளாண் உதவி இயக்குனர்கள் அருள்தாசன், அமுதா, வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக சிகாமணி, தண்டபாணி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சின்னசாமி, செங்குட்டுவன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கருப்புசாமி, ஒன்றிய நிர்வாகிகள் நாராயணசாமி, மருதமுத்து, திருவள்ளுவன், ராமதாஸ், செல்வராஜ், வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் பாப்பாத்தி ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கம்மாபுரம்

இதேபோல் கம்மாபுரம் ஒன்றியம் முதனை கிராமத்தில் கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் இடுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (மாநிலத்திட்டம்) பிரேம்சாந்தி, வட்டார வேளாண் இயக்குனர் சுதமதி, தோட்டக்கலை துறை இயக்குனர் புவனேஸ்வரி, வேளாண் அலுவலர் ரத்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுரேஷ் வரவேற்றார்.

விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு, வேளாண் இடுப்பொருட்களை வழங்கி மாநில அரசின் திட்டங்கள் குறித்து பேசினார்.

இதில் ஊராட்சி துணை தலைவர் வேல்முருகன், ஊராட்சி செயலாளர் முத்தமிழ்செல்வன், தி.மு.க. நிர்வாகிகள் பன்னீர்செல்வம், சேதுராமன், ராமச்சந்திரன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ரஞ்சித் குமார் மற்றும் சிவமணி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

பரங்கிப்பேட்டை

புதுச்சத்திரம் அருகே உள்ள சின்னகுமட்டி ஊராட்சியில் நடந்த விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி கல்யாணம் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் கவிதா வரவேற்றார். இதில் விவசாயிகளுக்கு தென்னங்கன்று, மருந்து தெளிக்கும் ஸ்பிரேயர், உளுந்து பயிறு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகுமார், சிவஞானசுந்தரம், வேளாண்மை துறை இயக்குனர் பூங்கோதை, வேளாண்மைத்துறை அதிகாரிகள் வெங்கடேசன், அமுதா, தோட்டக்கலை துறை செந்தில்குமார், வணிகத்துறை ரவிக்குமார், பொறியியல் துறை ராஜசேகர், மீன்வளத்துறை காளிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் குமரேசன், ஊராட்சி மன்ற துணை தலைவர் காசிநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கனகராஜன், சேது மாதவன் மற்றும் தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் கவிதா நன்றி கூறினார்.


Next Story