சுருள்வெள்ளை ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை கட்டினர்


சுருள்வெள்ளை ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை கட்டினர்
x

குடிமங்கலம் பகுதியில் தென்னை மரங்களில் சுருள்வெள்ளை ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை கட்டியுள்ளனர்.

திருப்பூர்

குடிமங்கலம் பகுதியில் தென்னை மரங்களில் சுருள்வெள்ளை ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை கட்டியுள்ளனர்.

ரசாயன மருந்துகள்

குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை மரங்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈக்களால் மகசூல் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் குடிமங்கலம் பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் தனது தோப்பில் உள்ள அனைத்து தென்னை மரங்களிலும் மஞ்சள் நிற ஒட்டும் பொறியை கட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தென்னை மரங்களில் சுருள்வெள்ளை ஈக்களை பொருத்தவரை மஞ்சள் நிறம் தாய் பூச்சிகளை கவரக்கூடியதாக உள்ளது என்ற அடிப்படையில் ஏக்கருக்கு 8 எண்ணிக்கையில் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை பயன்படுத்த வேளாண்மைத்துறையினர் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் ஏக்கருக்கு 8 தென்னை மரங்களில் சுமார் 6 அடி உயரத்தில் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை கட்டி வைத்தோம். இதன் மூலம் சுருள் வெள்ளை ஈக்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது.

இரட்டை ஆதாயம்

அதே நேரத்தில் அவ்வாறு மஞ்சள் நிற ஒட்டும் பொறியை கட்டி வைத்த தென்னை மரங்களில் எலிகள் மற்றும் அணில்களால் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை. இதனால் தற்போது அனைத்து மரங்களிலும் மஞ்சள் நிற ஒட்டும் பொறியை கட்டி வைத்துள்ளோம்.

இதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் அணில்களால் ஏற்படும் இரண்டு விதமான இழப்பை தவிர்த்து இரட்டை ஆதாயம் பெற முடிகிறது. ரசாயன மருந்துகளை கூடுதலாக தெளித்தால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது போல இந்த இயற்கை முறையில் வேறு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் இந்த முறை மிகவும் பலனளிக்கக் கூடியதாக உள்ளது. உயரம் குறைவான மரங்களாக இருந்தால் தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடிப்பது மூலம் ஈக்கள், முட்டைகள், குஞ்சுகள் போன்றவற்றை அழிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story