கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்தில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story