மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டுஆற்றில் குதித்து முதியவர் தற்கொலை
கொடுமுடியில் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு ஆற்றில் குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
கொடுமுடி
கொடுமுடியில் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு ஆற்றில் குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
தண்ணீரில்...
கொடுமுடி காவிரி ஆற்றங்கரையில் காளியம்மன் கோவில் அருகே வட்டகொம்பனை உள்ளது. இந்த பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆற்றில் குதித்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதாக கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே முதியவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சாவு
இதைத்தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், 'இறந்த முதியவர் கொடுமுடி காவிரி ஆற்றங்கரையில் காளியம்மன் கோவில் அருகே உள்ள வட்டகொம்பனை பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் தான் கொண்டு மதுவில், விஷம் கலந்து குடித்தார். இதையடுத்து அவர் சட்டென்று ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது,' என தெரியவந்தது. எனினும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் இறந்த முதியவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.