தென்மேற்கு பருவமழையினால் பாதிக்கப்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்


தென்மேற்கு பருவமழையினால் பாதிக்கப்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
x

தென்மேற்கு பருவமழையினால் பாதிக்கப்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி தலைமை தாங்கி பேசுகையில், தென்மேற்கு பருவமழையினால் மாவட்டத்தில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து, அங்கு தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்கள் அனைவரும் தென்மேற்கு பருவமழையினால் ஏற்படும் சேதங்கள் குறித்து 24 மணி நேரமும் புகார் அளிக்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள 1077 மற்றும் 1800 4254 556 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் தென்மேற்கு பருவமழை மழைக்காலத்தில் பேரிடர் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவற்றை போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருந்திட வேண்டும், என்றார்.


Next Story