அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்


அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
x

ஏனங்குடியில் அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் ஏனங்குடியில் அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. .கூட்டத்திற்கு அமைப்புச் செயலாளர் ஆசைமணி தலைமை தாங்கினார். திருமருகல் ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருட்டிணன், பக்கிரிசாமி, மாவட்ட துணை செயலாளர் அபுசாலி, திட்டச்சேரி நகர செயலாளர் அப்துல் பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ., நாகை நகர செயலாளர் தங்க கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஏனங்குடி உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக திருமருகல் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் திருமேனி வரவேற்றார். முடிவில் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.


Next Story