ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை- காஞ்சீபுர கலெக்டர் தகவல்


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை- காஞ்சீபுர கலெக்டர் தகவல்
x

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம்,

மாணவர் சேர்க்கை

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் இயங்கும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி பயில விரும்பும் 4-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ- மாணவிகளுக்கு (85 சதவீதம்). மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவ-மாணவிகளுக்கு (10 சதவீதம்), பிற வகுப்பினர்கள் (5 சதவீதம்) என்ற விகிதத்தில் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ- மாணவிகள் https://tnadw-hms.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அடுத்த மாதம் 5-ந்தேதி வரை

பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை இணையதள வழியில் விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளுக்கு வருகிற 20-ந்தேதி வரையிலும் கல்லூரி விடுதிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 5-ந்தேதி வரை பதிவேற்றம் செய்யப்படும்.

எனவே, விடுதிகளில் மாணவர்களை சேர்த்து கல்வியில் முன்னேற்றம் பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story