கே.வி.குப்பம் அருகே மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
கே.வி.குப்பம் அருகே மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வேலூர்
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் அருகே மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
கே.வி.குப்பம் ஒன்றியம், வேப்பூர் ஊராட்சி, குடியாத்தம் ஆர்.எஸ்.தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடைபெற்றது. வேப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் கோட்டீஸ்வரிபாபு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ஆ.செல்வி வரவேற்றார். பிரசார வாகனத்தை கே.வி.குப்பம் ஒன்றிய கவுன்சிலர் கே.சீதாராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கே.வி.குப்பம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் என்.ஜி.சிவகுமார் ஊர்வலத்தை ஒருங்கிணைத்தார்.
பிரசாரத்தின் போது, பள்ளியில் 1-ம் வகுப்பில் புதிதாக சேர்ந்த 10 மாணவர்களுக்கு கே.வி.குப்பம் வட்டார கல்வி அலுவலர் பா.சுமதி சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஊர்வலம் முக்கிய சாலைகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது.
Related Tags :
Next Story