ஆதித்தனார் கல்லூரி மாணவர் சாதனை
மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில்ஆதித்தனார் கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார்
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
உலகநுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் ஒருங்கிணைப்புடன் தூத்துக்குடி மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது. இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி 3-ம் ஆண்டு பொருளியல் மாணவர் பா.செல்வம் பங்கேற்று, மூன்றாவது பரிசான ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசனிடம் பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவர் மற்றும் ஆதித்தனார் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஏ.செல்வக்குமார், இணை ஒருங்கிணைப்பாளர் மு.திலீப்குமார் ஆகியோரை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் பாராட்டினார்.
Related Tags :
Next Story