ஆதித்தனார் கல்லூரியில் கல்வி வளர்ச்சி நாள் விழா


ஆதித்தனார் கல்லூரியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 5:42 PM IST)
t-max-icont-min-icon

ஆதித்தனார் கல்லூரியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 231 சுயநிதிப்பிரிவு, இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடந்தது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயராமன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் தொடக்க உரையாற்றினார்.

பேச்சு போட்டியில் மாணவர்கள் மரிய இசக்கி என்ற மாதன், பசுபதி, சக்தி செல்வன் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களையும், கட்டுரை போட்டியில் மாணவர்கள் முரளி கார்த்திக், மாரி விக்னேஷ், தினேஷ்குமார் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களையும் பிடித்தனர்.

பேச்சு போட்டியின் நடுவர்களாக பேராசிரியர்கள் பென்னட், திருச்செல்வன், சிரில் அருண் ஆகியோரும், கட்டுரை போட்டியின் நடுவர்களாக பேராசிரியர்கள் மகேஸ்வரி, அன்டனி பிரைட்ராஜா ஆகியோரும் செயல்பட்டனர். இளையோர் செஞ்சிலுவை சங்க பேராசிரியர் பார்வதி தேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை சுயநிதிப்பிரிவு பேராசிரியர்கள் கரோலின் கண்மணி ஆனந்தி, ரூபன் சேசு அடைக்கலம், சுமதி, ஸ்வீட்லின் டயனா, ராஜபூபதி, சகாய ஜெயசுதா, ஆக்னஸ், சுகாசினி, ஆய்வக உதவியாளர் ஜெயந்தி மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.


Next Story