மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா


மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா
x

சிவகிரி அருகே மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா நடந்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே தேவிபட்டணத்தில் நாடார்களுக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு வளைகாப்பு நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பூஜை நடத்தி வழிபாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் வளையல் அணிவித்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை நாடார் உறவின் முறை தலைவர் பெரியசாமி, செயலாளர் அருணாசலம், பொருளாளர் அல்லி ஆகியோர் தலைமையில் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.


Next Story