கம்மாபுரம் ஒன்றியத்தில்வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
கம்மாபுரம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
கம்மாபுரம்,
கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான மதுபாலன் ஆய்வு செய்தார். முன்னதாக வடக்கு சேப்பாளநத்தம் ஊராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை ஆய்வு செய்த அவர் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பயனாளிகளை அறிவுறுத்தினார். தொடர்ந்து ரூ.43 லட்சத்தில் கட்டப்படும் ஊராட்சி மன்ற கட்டிடம், சிமெண்ட் சாலை மற்றும் உலர் களம், அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அவர் கோட்டகம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ஏரி தூர் வாரும் பணி, உலர்களம் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் நெய்வேலி ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, கழிவறை கட்டுமான பணி, உலர்களம் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் வடக்கு வெள்ளூரில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி, ஊரக வேலை உறுதி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், ஒன்றிய பொறியாளர் ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிகாசலம், பணி மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆசைத்தம்பி, செல்வி ஜெயராமன், மோகன், மலர்விழி வேல்முருகன், ஊராட்சி செயலர்கள் முருகானந்தம், தமிழரசன், மணிகண்டன், செல்லமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.