எர்ணாகுளம்- பாட்னா எக்ஸ்பிரஸ் ெரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
சேலம்
சூரமங்கலம்:-
சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ெரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க ெரயில்வே நிர்வாகம் கூடுதல் பெட்டிகளை ரெயில்களில் இணைத்து இயக்கி வருகிறது. அந்த வகையில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக வாரம் இருமுறை இயக்கப்படும் எர்ணாகுளம்- பாட்னா எக்ஸ்பிரஸ் ெரயிலில் (வண்டி எண் 22643) நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் இரண்டாம் வகுப்பு பொதுபெட்டியில் கூடுதலாக ஒரு பெட்டி இணைத்து இயக்கப்படும், இதேபோல் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் பாட்னா- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ெரயிலில் (வண்டி எண் 22644) வருகிற 30-ந் தேதி முதல் இரண்டாம் வகுப்பு பொதுபெட்டி கூடுதலாக ஒரு பெட்டி இணைத்து இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story