பணியாளர்கள் மீதான வழக்கை திரும்ப பெற நடவடிக்கை


பணியாளர்கள் மீதான வழக்கை திரும்ப பெற நடவடிக்கை
x

பணியாளர்கள் மீதான வழக்கை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் தேர் விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 பேரை சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது சிகிச்சையில் இருந்த ராஜேந்திரன் என்பவர் தேர் விபத்து தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்பின் அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவாரூரில் பெரியகுடி என்ற கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணறு கடந்த 2011-ம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது. அப்போது அதிகமான வாயு வெளியே வந்ததால் அந்த கிணறு மூடப்பட்டது. மீண்டும் அதில் இருந்து ஏதேனும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தற்போது நவீன தொழில்நுட்பம் மூலம் அதனை நிரந்தரமாக மூட ஓ.என்.ஜி.சி. நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய கிணறு அமைக்கப்பட வாய்ப்பில்லை. புதுக்கோட்டை தேர் விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக முதல்-அமைச்சர், துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். அப்போது கலெக்டர் கவிதாராமு உள்பட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் நேற்று மாலை கலந்து கொண்டு பேசினார்.


Next Story