மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
x

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.

சேலம்

பனமரத்துப்பட்டி:

மல்லூர் அருகே நிலவாரப்பட்டி ஊராட்சி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 82). இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணிஅளவில் தாசநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மல்லூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதமாக பொன்னுசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பொன்னுசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். விபத்து குறித்து மல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story