மத்திகிரி அரசு கலை கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு


மத்திகிரி அரசு கலை கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
x
கிருஷ்ணகிரி

மத்திகிரி

மத்திகிரி அருகே மிண்டிகிரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன் வரவேற்றார். ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கி கூறினார். மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர்கள் மாதேஸ்வரன், சென்னீரப்பா, மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம் தலைமையில் மாணவ-மாணவிகள் உறுதிெமாழி ஏற்று கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கஜேந்திர மூர்த்தி, மாநகர துணை செயலாளர் ரவிக்குமார், கல்லூரி நிதியாளர் கிருஷ்ணபிரியா மற்றும் பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்த்துறை தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


Next Story