ஆதார் அட்டை எடுக்க முடியாததால் விரக்தி; வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


ஆதார் அட்டை எடுக்க முடியாததால் விரக்தி; வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 April 2023 2:15 AM IST (Updated: 19 April 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே ஆதார் அட்டை எடுக்க முடியாததால் விரக்தியடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

கொடைரோடு அருகே உள்ள ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் சிறுமணிசெல்வம் (வயது 32). இவர் ஊசிமணி, பாசிமணி விற்கும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 3 மாதங்களாக வேடசந்தூர் மார்க்கெட்ரோடு சந்தை பகுதியில் குடிசை அமைத்து, அதில் மனைவி, மகள், மகனுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமணிசெல்வம், ஆதார் அட்டை பெறுவதற்காக முயற்சி செய்தார்.

இதற்காக அவர், வேடசந்தூரில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி உள்ளார். அப்போது இ-சேவை மைய ஊழியர்கள், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க பிறப்பு, கல்வி உள்ளிட்ட சான்றிதழ்களை கேட்டனர். ஆனால் தன்னிடம் அதுபோன்ற சான்றிதழ்கள் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் உரிய சான்றிதழ்களுடன் வந்தால் ஆதார் கார்டு எடுத்து கொடுப்பதாக கூறி இ-சேவை மைய ஊழியர்கள், அவரை அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே அவர் தனக்கு ஆதார் அட்டை எடுக்க முடியாததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது மனைவியிடம் கூறியுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதியில் உள்ள இரும்பு கம்பத்தில் சிறுமணிசெல்வம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story