காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
சங்ககிரி அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
சங்ககிரி:
காதல் திருமணம்
சங்ககிரி அருகே வடுகபட்டி சென்னக்கல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 28), லாரி பட்டறை தொழிலாளி. ஈரோடு மாவட்டம் பரெுந்துறை அருகே வெள்ளோடு ராமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பவித்ரா (26) ஆகிய இருவரும் காதலித்து 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தஷ்மிகா (1½) என்ற மகளும் உள்ளார். பவித்ரா, தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் பரெுந்துறையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு தீபாவளி பண்டிகைக்கு சென்று வீட்டுக்கு வந்தனர்.
தற்கொலை
இதற்கிடையே நேற்று பவித்ராவின் கணவர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் குழந்தை அழும் சத்தம் நீண்ட நேரமாக கேட்டது. அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் பவித்ரா சேலையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.தகவல் அறிந்து விரைந்து வந்த சங்ககிரி போலீசார் பவித்ரா உடலை சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
பவித்ரா தற்கொலை தொடர்பாக அவருடைய தந்தை வெங்கடாசலம் சங்ககிரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.