மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் நாட்டு வைத்தியர் கீழே விழுந்து சாவு


மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் நாட்டு வைத்தியர் கீழே விழுந்து சாவு
x

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் நாட்டு வைத்தியர் கீழே விழுந்து இறந்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஓ.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி மஞ்சுளா(வயது 39). நாட்டு வைத்தியர். இவர் நேற்று இரவு தனது உறவினர் கணேசன்(29) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நார்த்தாமலை சென்று விட்டு மீண்டும் கீரனூர் நோக்கி புதுக்கோட்டை சாலையில் வந்து கொண்டு இருந்தார். அப்போது சாலையின் குறுக்கே திடீரென நாய் ஒன்று ஓடியதால் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் மஞ்சுளாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கணேசனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story