மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் சிக்கினார்
கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள் (வயது 60). இவர் கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பாடு பார்சல் வாங்குவதற்காக சென்றார். அப்போது ஓட்டல் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, சாப்பாடு பார்சல் வாங்கிவிட்டு திரும்பியபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதற்குள் யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று எட்டயபுரம் ரோட்டில் போலீசார் வாகனச் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கோவில்பட்டி சிந்தாமணி நகரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் மணிகண்டன் (வயது 25) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லட்சுமணப் பெருமாளுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். மேலும் அவர் வேறு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.