மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

கன்னியாகுமரி

அருமனை:

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

அருமனை அருகே உள்ள ராமவர்மன்சிறை மேலேதட்டு ஊரை சேர்ந்தவர் கிறிஸ்டல்ராஜ். இவரது மகன் ஆசிஷ் (வயது19). இவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அருமனை அருகே உள்ள செம்மங்காலை என்ற இடத்தில் மோட்டார் ைசக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆசிஷ் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆசிஷ் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story