ராமநத்தம் அருகே மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
ராமநத்தம் அருகே மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
கடலூர்
ராமநத்தம்,
ராமநத்தம் அடுத்துள்ள ம.புடையூர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஏழுமலை (வயது 27). வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.
இதையடுத்து, இவருக்கும் நர்சிங் கல்லூரி படிக்கும் 17 வயது மாணவி ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, இன்று(வியாழக்கிழமை) திட்டக்குடியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது.
இதுபற்றி அறிந்த மங்களூர் சமூக நல விரிவாக்க அலுவலர் புண்ணியவதி, சமூக ஊர் நல அலுவலர் பூபதி மற்றும் திட்டக்குடி மகளீர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபா லெட்சுமி, ராமநத்தம் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், கலியமூர்த்தி ஆகியோர் ம.புடையூர் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தி அந்த மாணவியை மீட்டு கடலூர் குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story